‘ரமழானை வரவேற்போம்’ என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் Abrar Foundation நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர், ஏ.ஆர்.எம்.பாக்கியத்துஸ் ஸாலிஹாத் கலாபீடத்தின் விரிவுரையளார் மிஸ்பாஹ் (உஸ்வி), உண்மை உதயம் ஆசிரியர் மற்றும் பரகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கலந்துகொள்ளவுள்ளனர்.