ஹிஜ்ரி 1446 (2025) ஆண்டுக்கான புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பிப்பதாக பேருவளை பைத்துல் முபாரக் வ தாருல் முஸ்தபா புகாரி தகிய்யா அறிவித்துள்ளது.
அல் ஹிஸாப் அல் பலகி வானிலை கணிப்பீட்டின் அடிப்படையில் 2025 மார்ச் 1ஆம் திகதி சனிக்கிழமை புனித ரமழான் மாதம் ஆரம்பமாகும் எனவும் ரமழான் மாதத்தின் முதலாம் இரவு இன்று பெப்ரவரி 28 வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஆரம்பமாகும் எனவும் பேருவளை புஹாரி தகிய்யா அறிவித்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய பத்வா கவுன்சிலும் கணிப்பீட்டின் அடிப்படையில் ரமழான் மாதம் நாளை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு ரமழான் மாதத்தை தீர்மானிப்பதற்கான பிறை பார்க்கும் மாநாட்டை இன்று (28) ஏற்பாடு செய்துள்ளது.
பிறைக் கண்டால் 011243 2110/ 011245 1245 / 077 735 3789 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பிறைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
வெற்றுக்கண்ணால் பார்க்கப்படும் பிறை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பிறைக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.