எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் முசலிப்பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்காக உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வுகள்உலக முஸ்லிம் லீக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் (கபூரி) தலைமையில் இன்று இடம்பெற்றன.
மன் /கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மன்/ ஹுனைஸ் நகர் வித்தியாலயத்திலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கியஸ்தர் சாலிஹ் அல் கர்னி மற்றும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 730 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.