நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் ‘இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், மிஷ்காத் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உஸ்தாஸ் எம்.ஏ.எம். மன்சூர் கலந்துகொள்ளவுள்ளனர்.