காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி கடைசி பரிமாற்றத்தில் மேலும் 3 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்டவர்கள் ஓமர் வென்கெர்ட், ஓமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹன் ஆகியோராவர்.
அப்போது பணயக் கைதி ஒருவர் ஹமாஸ் படை வீரரொருவரின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்து வருகின்றனர்.
பதிலுக்கு நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. அண்மையில் அப்படி 3 பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர்.
அதில் ஒமர் ஷெம் டோவ் என்ற பணயக் கைதி, ஹமாஸ் படையை சேர்ந்த இரண்டு பேரின் நெற்றி பகுதியில் முத்தம் கொடுத்து விடைபெற்றார்.
விடுவிக்கப்பட்ட மூவருக்கும் சான்று அளிக்கப்பட்டது. அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் 505 நாட்கள் ஹமாஸ் பிடியில் இருந்துள்ளனர்.
ஒமர் மிகவும் மெலிந்து போயுள்ளார். ஆனால், உற்சாகமாக காணப்படுகிறார். பொசிட்டிவ் மனநிலையை அவர் கொண்டுள்ளார் என அவரது தந்தை கூறியுள்ளார்.
‘அதுதான் என் மகன் ஒமர். அவன் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவான். அதானல் ஹமாஸின் அன்பையும் பெற்றுள்ளான்’ என அவரது தாயார் கூறியுள்ளார்.
இந்தக் காட்சி பலரையும் ஆச்சரியத்திலும் உருக்கத்திலும் ஆழ்த்தியது. போரின் கோரப்பலனைச் சந்தித்த இரு தரப்பினரும், மனிதநேயத்தின் மெல்லிய கோட்டை ஒருசில தருணங்களாவது பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை இந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.
மேலும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் எவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்பதை இந்தக்காட்சி காட்டுகிறது.
⚡️#BREAKING Israeli “hostage” kisses the forehead of 2 Hamas members pic.twitter.com/Icg6TDEyEQ
— War Monitor (@WarMonitors) February 22, 2025