2025 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 இல்

Date:

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட  அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தலின் படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என அறிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் மார்ச் 07 திகதி முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk-ஐ பார்வையிட்டு அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அனுமதி அட்டையில் உள்ள பாடம், மொழி மற்றும் பெயரில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், மார்ச் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு மாற்றங்களை இணையதளத்தின் ஊடாக செய்ய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...