2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்:’பாகிஸ்தானை வீழ்த்தியது போதாது; இன்னும் அபாரமாக விளையாடியிருந்தால், சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம்’

Date:

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதியில் விளையாடுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றியில் விராத் கோஹ்லி குவித்த அபார சதமும் ஷ்ரெயாஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் அவர் ஏற்படுத்திய இணைப்பாட்டமும் முக்கிய பங்காற்றின.

சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி 62 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்னில் அவுட்டானார்.

வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்இ கோலி பவுண்டரி அடித்து சதம் அடித்தார். இதன்மூலம், 42.3 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

‘நாங்கள் சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம், உறுதியான வெற்றியாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் லெக்ஸ்பின்னர் அப்ரார் அகமது 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்ராரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவரை எதிர்கொள்ளும் போது கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களின் முன்னணியை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த போட்டிகளில் மேலும் சிறந்து விளையாடும் நோக்கத்தில் அணியின் வீரர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஏற்கனவே, வங்கதேசப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்ததால்,  அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேவேளையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...