இந்தியாவில் பெங்களூர் மணிபாலில் நடைபெறவுள்ள T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாடுவதற்காக கஹட்டோவிட்டவைச் சேர்ந்த முபீன் மதனி இன்று இந்தியா புறப்பட்டார்.
நாளை 27 ஆம் திகதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எஸ்.எம் கிரிக்கெட்டர்ஸ் உட்பட ஆறு அணிகள் கலந்துகொள்கின்றன.
அந்தவகையில் C S cricket club அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முபீன் களம் இறங்குகின்றார்.
ஓர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று கலந்து கொள்ளும் முதலாவது கஹட்டோவிட்ட வீரர் இவராவார்.
முபீன் உள்ளூரில் Essex அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருவதுடன் பிரதேசத்தின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியான KPL போட்டிகளையும் முன் நின்று நடத்தி வருகிறார்.
முபீனின் இந்த பயணம் வெற்றி பெறவும் சாதனைகள் படைக்கவும் ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துகிறோம்.