துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் இன்று ஆசிய நாடுகளான மலேசிய இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் முதல் பயணமாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் அவர் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் துருக்கி ஜனாதிபதி ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
நீண்டகால உறவுகளின் அடிப்படையில் தொடர்ந்து வளர்ந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை இந்தப் பயணம் வலுப்படுத்துவதுடன் உலக விவகாரங்களில் குறிப்பாக பலஸ்தீனப் போராட்டத்தில் இரு தரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவுள்ளது.
இந்த மூன்று நட்பு மற்றும் சகோதரத்துவ நாடுகளுக்கும் மேற்கொள்ளும் இப்பயணத்தின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவக்கூடிய மேலும் பல ஒப்பந்தங்களில் துருக்கிய ஜனாதிபதி கையெழுத்திடவுள்ளார்.
இதேவேளை அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு அளித்து வரும் பங்களிப்புக்காக அர்தூகானுக்கு மலாயா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் விருது வழங்கப்படவுள்ளது.