இரத்தினபுரி மாவட்ட பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய பாகிஸ்தான் பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025!

Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை 21 முதல் 23 வரை இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ உள்ளக விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்தது.

கடந்த ஆண்டு வெற்றிகரமான போட்டியின் தொடர்ச்சியாக இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 40 உள்ளூர் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் பிரதி உயர் ஸ்தானிகர் வாஜித் ஹசன் ஹஷ்மி அவர்கள் விருது வழங்கும் விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு இறுதிப் போட்டிகள் மற்றும் தகுதிச் சுற்றுகளில் வெற்றி அடைந்தவர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக மற்றும் கலாச்சார செயலாளர் அதில் சத்தார் மற்றும் இரண்டாவது செயலாளர் இப்திகார் ஹுசைன் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது உரையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவையும் தொடர்பையும் இணைப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர் பாகிஸ்தானும் இலங்கையும் நெருங்கிய உறவைப் பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் அடிமட்ட அளவில் இருதரப்பு நட்புறவுக்கு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதி உயர்ஸ்தானிகர் வீரர்களுக்கு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களையும் வழங்கி வைத்ததோடு வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு கணனிகளையும் வழங்கி வைத்தார்.

பாகிஸ்தான் பெட்மிண்டன் போட்டி 2025 ஐ சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கும் பிரதி உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...