உலக புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை!

Date:

பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்திய ஹாடி மாத்தர் என்ற இளைஞரை (27)குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

32 ஆண்டுகள் சிறை தண்டனையை மாத்தர் எதிர்கொள்கிறார். ஏப்ரல் 23 ஆம் திகதியில் இருந்து அவருக்கான தண்டனை விதிக்கப்படுகிறது.

விசாரணையின் போது மாத்தர்  எதுவும் பேச மறுத்துவிட்டார். விசாரணை முழுவதும், நீதிமன்றத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அவர் “சுதந்திர பலஸ்தீனம்” என்று மட்டுமே கூறினார்.

இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் – அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 2022 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மேடையில் ஏறிய ஹாடி மாத்தர், சல்மான் ருஷ்டியை வெறும் 27 நொடிகளில் 12 முறை சரமாரியாகக்  கத்தியால் குத்தினார்.

சம்பவத்தின் பின் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

இந்த தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தனது வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

ஹாடி மாத்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவலுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என்று கூறப்படுகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...