இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வினை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம், சமூக, கல்வி அபிவிருத்தி நிறுவனம் (SEDO), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணிகள் சம்மேளனத்தின் கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஒகடபொல, உடுகொட கிளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சமீர ஜயவர்தன அவர்கள் உரையாற்றவுள்ளதுடன் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் அவர்களும் உரையாற்றவுள்ளார்.