‘கடவுளுக்கு நன்றி’: இன்று விடுதலையாகும் இஸ்ரேலிய பணய கைதிகள்!

Date:

ஹமாஸ் இயக்கம் ஏற்கனவே அறிவித்தது போல இன்று விடுதலையாகும் மூவரில் ஒருவர் யார் என்பது பற்றிய தகவலை சகோதர இயக்கமான சரயா அல் குத்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த பயணக் கைதி விடுதலையாகும் அந்த செய்தி அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி இது.

இதேவேளை காசாவின் மத்தியப் பகுதியான கான் யூனூஸ் பகுதியில் இந்த மூவரை விடுதலை செய்கின்ற உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியள்ளன.

ஹமாஸ் இயக்கம் சகோதர இயக்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

ஏற்கனவே ஐந்து குழுக்கள் விடுதலை செய்த நிலையில் இன்று 6வது குழுவில் மூன்று பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க அதாவது சனிக்கிழமையன்று அனைத்து பணயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எச்சரிக்கைக்கு மாற்றமாக 3 பேர் மாத்திரமே விடுதலை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகள் யாஹர் ஹரன் , அலெக்சாண்டர் ருபெனோ, சஹொய் டிகெல் ஷென் ஆகிய மூவரை ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது.

இதேவேளை, அதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுபகிறது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...