காசா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும்இ நிறுவனங்களையும் ஜம்இய்யத்துல் உலமா பாராட்டுகிறது

Date:

காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத இந்த மும்மொழிவானது பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதுடன் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் நீதிக்கோட்பாடு, சுய நிர்ணய உரிமை என்பவற்றை புறக்கணிப்பதாகவும் உள்ளது.

காஸா மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடானது நீதி, சமாதானம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் அரசுரிமைக்கான நியாயமான அபிலாஷைகளை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தினை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வுடன் துன்பங்களை அனுபவித்த காஸா மற்றும் பலஸ்தீன மக்களுடன் நாங்களும் இணைந்து நிற்கிறோம். முன்மொழியப்பட்ட இடமாற்றத் திட்டம் அநீதியானது மட்டுமன்றி பிராந்தியத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.

பலஸ்தீன மக்களின் நிலம்,வீடுகள் மற்றும் இறையாண்மைக்கான உரிமைகள் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்கள், நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் சுதந்திரம், கௌரவம் மற்றும் மாநில உரிமைகளைப் பெற தங்களது ஆதரவை தீவிரப்படுத்துமாறு உலகளாவிய தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனச்சாட்சி உள்ள அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கிறோம்.

பலஸ்தீன மக்களுக்கு அல்லாஹு தஆலா வலிமைகளையும், பொறுமையையும், வெற்றியையும் வழங்குவானாக. அப்பகுதியில் நீதியும் நிரந்தர அமைதியும் நிலவட்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...