சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிர்வாக இயக்குனர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திராவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

 

 

 

Popular

More like this
Related

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...