பெப்ரவரி 01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தின் போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் போசகருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார தலைமையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் விசேட கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதில் கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
சர்வதேச பாடசாலைகளின் தோற்றம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் அவற்றின் தரம் குறித்து எந்த அமைப்புக்களோ, நிறுவனங்களோ போதிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.
இதன்காரணமாக அதிகமான சர்வதேசப் பாடசாலைகள் தரம் குறைந்தே காணப்படுகின்றது. தகுதி குறைவான ஆசிரியர்கள், வளப்பற்றாக்குறை, இட நெருக்கடி, பாதுகாப்பின்மை, பாவனைக்கு பொருத்தமில்லாத கட்டிடங்கள், கற்றல், கற்பித்தல் உபகரணங்களின் குறைபாடு, போதிய பயிற்சி இன்மை , ஒழுக்க வீழ்ச்சி போன்ற பல அம்சங்கள் இப்பாடசாலைகளில் நிலவுவது பற்றி இதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கையாக ஒரு குழு அமைக்கப்பட்டு, தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வி அமைச்சின் ஆலோசனைகளையும் பெற்று சரியான பொறிமுறையொன்றை உருவாக்கி, அதன் மூலம் வினை திறனுடன் இப்பாடசாலைகள் இயங்க வழி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்
திரு. ஷாம் நவாஸ் தெரிவித்தார்.
ஆக்க பூர்வமான இப்பணியில் இணைய ஆர்வமுள்ளவர்கள் 0777359678 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது acumlyf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பினை மேற்கொண்டு தமது ஆதரவை தெரிவிக்கலாம் எனவும் திரு.சாம் நவாஸ் மேலும் தெரிவித்தார்.