இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் பிறப்பு முதல் இறப்பு வரை சேவையாற்றும் கிராம சேவகர்கள் 20 பேரை கெளரவிக்கும் நிகழ்வு மாவனல்லைக் கிளை தலைவர் எஸ்.ஐ.எம். பஹ்மி தலைமையில் நடைபெற்றது.
04 ஆம் திகதி இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் வி.ஓ.எல்.எஸ்.ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்புரையினை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உப செயலாளர்களில் ஒருவரும் தேசிய கல்வி நிலையத்தின முன்னாள் செயற்திட்ட அதிகாரியுமான ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் பிரதான அம்சமான 20 வருடத்திற்கு மேலாக சேவையாற்றும் 08 கிராம சேவகர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அனைத்து கிராம சேவகர்களுக்கும் தலா 2,000.00 ரூபாய் பெறுமதியான ஒரு வருடத்திற்குத் தேவையான காகிதாதிகள் வழங்கப்பட்டன.
வழமைப் போன்று மாவனல்லை பிரதேச செயலகத்திற்கும் ஒரு வருடத்திற்கு தேவையான காகிதாதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜமாஅத் ஆண், பெண் அங்கத்தவர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் சுமார் 50 பேரளவில் கலந்து கொண்டனர்.