முன்னணி வணிகக் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Holdings Ltd) முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா (Kandiah (Ken) Balendra) காலமானார்.
கென் பாலேந்திரா என்று எல்லோராலும் அறியப்பட்ட இலங்கையின் பிரபல தொழிலதிபர் தனது 85 வயதில் காலமானார்.
1940 பெப்ரவரி 3ஆம் திகதி பிறந்த இவர் நாட்டிலும் பிராந்தியத்திலும் ஏராளமான நிறுவனப் பதவிகளை வகித்துள்ளார்.
கந்தையா கென் பாலேந்திரா 1998ம் ஆண்டு இலங்கையில் மிக உயர்ந்த கௌரவ விருதான தேசமாண்ய விருதை பெற்றுள்ளார்.
இதேவேளை, நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முதல் இலங்கைத் தலைவராகவும், பிராண்ட்ஸ் லங்கா மற்றும் காமன்வெல்த் மேம்பாட்டுக் கழகத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கென் பாலேந்திரா ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக திகழ்ந்து வர்த்தகத்துறையில் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.