தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மே மாதத்தில்!

Date:

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டமை ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இந்த மனுக்கள் இன்று பிரீத்தி, பத்மன் சூரசேன, யசந்த கோடகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஷிரான் குணரத்ன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.

இதன்போது, தேசபந்து தென்னக்கோன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

சட்டத்தரணியின் கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், இந்த மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

கார்டினல் மால்கம் ரஞ்சித், இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற கட்சிகளால் ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...