பலஸ்தீனில் ஏற்படுத்திய சேதங்களுக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும்: மலேசிய பிரதமருடனான சந்திப்பில் துருக்கி ஜனாதிபதி

Date:

பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்பதை இஸ்ரேல் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதோடு அது ஏற்படுத்தியுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி மலேசிய பிரதமர் அன்வர் இப்றாஹீமுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு 1967 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரமானதும் இறையாண்மை கொண்டதுமான பலஸ்தீன அரசை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளும் கைகோர்த்தால், காசாவில் நிலவும் மனிதாபிமான சவாலை சமாளிக்க முடியுமென நான் நம்புகிறேன்.

இந்நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை துருக்கிக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருபக்க வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட 11 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...