பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

Date:

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக்  குழுத் தலைவரான ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைத் தந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.

2023  செப்டம்பர் 13, அன்று நேபாளத்திலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்கா  சர்வதேச விமான நிலையத்தில்  “கணேமுல்ல சஞ்சீவா” கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரிடம் போலி பாஸ்போர்ட் இருந்ததுடன்,  தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தனிப்பட்ட விவரங்களும் இருந்தன.

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாக நம்பப்படும் “கணேமுல்ல சஞ்சீவா”, பின்னர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று, பின்னர் சர்வதேச ‘ரெட் வாரண்ட்’ சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...