மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப் பிரிவின் ஏற்பாட்டில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்!

Date:

நாட்டின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்பிரிவின் ஏற்பாட்டில் 04ம் திகதி ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க் வளாகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடப்பெற்றது.

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்பிரிவு அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.முபாரக் தலைமையில் அமைப்பின் செயலாளர் ஏ.எல்.சதாம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தரவிக்குளம், தொப்பிகல 232வது படைப்பிரின் கட்டளைத் அதிகாரி கேர்ணல் ஆர்.ஆர்.சீ.கருணாரத்ன (RWP) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன், விஷேட அதிதிகளாக SLNS கஜபா படைப்பிரிவு அதிகாரி கமாண்டர் நவரத்ன பண்டார, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார, விமானப்படை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் மதுரங்க, மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.தாஹிர் மற்றும் சர்வ மத தலைவர்கள்,  அக்கரைப்பற்று தக்வா அவசர பிரிவின் தலைவர் அல்- ஹாஜ் . எம் ஹயாத் , மற்றும் கல்விமான்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

வருகை தந்த அதிதிகளை ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய குழுவினரின் பேண்ட் வாத்தியத்துடனும் மீராவோடை அல்- ஹிதாயா வித்தியாலயத்தின் கலாச்சார அணிவகுப்பு வரவேற்புடனும் , ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பகுதிநேர கராத்தே மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்வுகளுடனும் வரவேற்கப்பட்டனர்.

தேசிய கொடியேற்றி தேசிய கீத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வுகள் முப்பெரும் நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டு மூன்றிடங்களில் இடம்பெற்றன.

படகோட்ட போட்டி , முதலுதவிப்பயிற்சி, கௌரவிப்பு நிகழ்வு என்பன டைவர்ஸ் பார்க் வளாகத்தில் இடம்பெற்றதுடன், மூவ் கல்குடா டைவர்ஸ் மற்றும் தியாவட்டவான் அர் ரஷாத் விளையாட்டுக்கழகம் இணைந்து தியாவடவான் அரபா வித்தியாலய மைதானத்தில் கிரிக்கெட் போட்டியினையும், முனை முன்னேற்றக்கழகத்துடன் மூவ் கல்குடா டைவர்ஸ் இணைந்து முனை பார்க் வளாகங்களில் சிறுவர் போட்டி நிகழ்ச்சிகளைளும் இடம்பெற்றது.

வருகை தந்த அதிகதிகளினால் விருதுகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...