லெபனானில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி முகமது ஷாஹின் கொல்லப்பட்டார்.
முகமது ஷாஹின் ஹமாஸ் அமைப்பின் லெபனான் பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. பணயக் கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
அதேவேளை, இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. மேலும், லெபனானுக்குள் தங்கள் படைகளை இஸ்ரேல் நிலைநிறுத்தியுள்ளது. இந்த போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் லெபானானில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறப்பட உள்ளது.