ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதலாவது கட்டத்தின் விடுதலையாகின்ற பணயக்கைதிகளின் 5 வது அணி விடுவிக்கப்பட்டனர். குறித்த கைதிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டனர்.
அதன்படி, ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்தது.
லிவி, ஒஹட்பென் அமி மற்றும் ஷராபி ஆகியோர் தெற்கு இஸ்ரேலில் ஒரு ஆரம்ப வரவேற்பு இடத்தில் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள்.
இந்த இடமாற்றத்தில் பணயக்கைதிகள் ஒரு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்கள் விடுதலைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றைப் பிடித்துக்கொண்டு உரையாற்ற வைக்கப்பட்டனர்.
இதற்குப் பதிலாக பலஸ்தீனிய கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஓஃபர் சிறையிலிருந்து புறப்பட்டுள்ளது இன்று 183 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
3 இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுதலையான படங்கள்: