அநுராதபுரம் வைத்தியசாலை பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் ;முன்னாள் இராணுவ வீரர் கைது!

Date:

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital – Anuradhapura) வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பெண் வைத்தியர் கத்தி முனையில் தவறான முறைக்குட்படுத்திய சம்பவத்திற்கு நீதி கோரியும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...