இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்; 3000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு

Date:

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. கடந்த இரண்டு நாள்களாக அதற்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

குறிப்பாக, கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 இஸ்லாமியர்களை அழைத்து வருமாறு  உத்தரவிடப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கான பாஸ் விநியோகம் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டு வந்தன.

மேலும், பள்ளவாசல் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் த.வெ.க தலைவர் விஜய், இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ மைதான திடலுக்கு வெள்ளை உடையில் தலையில் தொப்பியுடன் வந்தார்.

இவரோடு, இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களின் முறைப்படி அனைவரும் தொழுகை செய்தனர்.

இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இன்று ஒருநாள் முழுவதும் விஜய் நோன்பிருந்து, மாலை நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நோன்பு திறந்தார்.

சிறப்புத் தொழுகையில் விஜய் கலந்துகொண்டு, பிரார்த்தனை மேற்கொண்டார். நோன்பு திறப்பவர்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் லுங்கி அணிந்து வந்திருந்தார். தொழுகையின்போது, இஸ்லாமியர்களைப் போல் தலையில் தொப்பி அணிந்து தொழுகை செய்தார்.

தொழுகை முடிந்து, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது,  “என் நெஞ்சில் குடியிருக்கும், எனது அன்பான இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்” என்று தொடங்கினார்.

“மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்கள், என்னுடைய அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டு நீங்கள் அனைவரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார் விஜய்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1,500 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 3000-க்கும் அதிகமானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொழுகை முடிந்து வெளியே வந்த விஜய், திறந்த வேனில் ஏறி நின்று, அங்கு கூடியிருந்தவர்களுக்கு கைகளை அசைத்துக் காட்டியும், இதயம் போல கைகளை குவித்துக் காட்டியும் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...