இன்றைய சூழலில் தாய்மாரையும் அறிவூட்டுவது அவசியமானதாகும்: ரமழான் கால பயிற்சிநெறி இறுதிநாள் நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத்

Date:

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம் இந்த ரமழானில் ஏற்பாடு செய்த சிறுவர்களுக்கான ரமழான் பாடநெறியையும் தாய்மார்களுக்கான 7 நாள் பாடநெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான பரிசில்கள் வழங்குவதற்கான நிகழ்வு மார்ச் 23ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய காலத்தின் தேவை கருதி இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

ரமழான் காலம் பிரயோசனமாக கழிய வேண்டும் என்ற வகையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இமாம் ஷாபி நிலையமும் சிறுவர்களுக்கு வேறாகவும் தாய்மார்களுக்கு வேறாகவும் தனித்தனியாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சிகளின் ஊடாக வெவ்வேறு தலைப்புக்களில் இரு சாராருக்கும் விரிவுரைகளின் ஊடாக அறிவூட்டப்பட்டதோடு ரமழான் காலத்தை பிரயோசனமாக கழிப்பதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

துறைசார்ந்த வளவாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் இறுதி நாள் வைபவத்துக்கு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் (கபூரி) அவர்கள் தலைமை தாங்கினார்.

இதன்போது இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்கும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் டாக்டர் ரிஷாத் (MD) அதிபர் எம்.எஸ்.எம். அஸ்கர், டாக்டர் பாரிஸ் உட்பட பல பிரமுகர்களும் சிறப்பான இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...