உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இன்றும் நாளையும் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
கடந்த ஒரு மாதம் காலம் நோன்பிருந்த முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்ளும் வகையில் நோன்பு பெருநாளைக்கான பிறையை தீர்மானித்து அதன் பிரகாரம் பெருநாளை கொண்டாடுவதே அவர்களின் மரபாகும்.
அந்தவகையில் இன்றை தினமும் நாளைய தினமும் உலகின் பல்வேறு பாகங்களிலும் பெருநாள் கொண்டாடப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும்.
அந்தவையில் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், யெமன், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் இன்றைய தினம் பெருநாளை கொண்டுகின்றன.
அதேவேளை எகிப்து, சிரியா, அல்ஜீரியா, ஓமான், ஈராக், லிபியா, துனிசியா, ஜோர்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் திங்கட்கிழமை பெருநாளை கொண்டாடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதேவேளை இலங்கை முஸ்லிம்களும் இன்றைய தினம் (30) பெருநாளை தீர்மானப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் பிறை பார்க்க ஒன்றுகூடவுள்ளனர். அதனைத்தொடர்ந்து பெருநாள் தீர்மானிக்கபடவிருக்கின்றது.