உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ!

Date:

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு  (09) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய சமல் ராஜபக்ஷ,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

SLPP வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற மூத்த நபர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.

அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் சென்று வருவதாகவும் அதன்படி, கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...