காசா மக்களுக்கு அமைதியும் சமாதானமும் நிலவ இந்நாளில் பிராத்திப்போம்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் செய்தி!

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி 

புனிதங்கள் நிறைந்த அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, அல்-குர்ஆன் ஓதி, இரா வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு அல்லாஹு தஆலா இந்த ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் பாக்கியத்தை வழங்கியிருக்கிறான்.

இந்நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்பெருநாள் தினத்தில் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும், சுபீட்சமும் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் நாம் பிரார்த்திப்பதோடு குறிப்பாக பலஸ்தீன் காஸா பகுதிகளில் வாழும் அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வெகு விரைவில் நீதி கிடைப்பதற்கும் அவர்கள் மீது அமைதியும், சமாதானமும் நிலவுதற்கும் பிராத்திப்போம்.

மேலும், இந்த ஈகைத் திருநாளில் எமது குடும்ப உறவுகளோடு ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணுவதோடு எம்மை சூழவுள்ள அயலவர்கள், ஏழை எளியவர்கள், தேவையுடையவர்களும் இப்பெருநாளை நல்லமுறையில் கொண்டாடிட எம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்து கொடுப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வானாக!

Popular

More like this
Related

பங்களாதேஷில் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தம்: பிரதமர் தாரிக் ரஹ்மான் முன்னிலையில் கையெழுத்து!

பங்களாதேஷின் 'ஈஸ்டர்ன் ரீஃபைனரி லிமிடெட்'   நிறுவனத்தைச் நவீனமயமாக்குவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் 1...

துனிசியாவில் கடும் வெப்பம்: சிறைகளில் 20 கைதிகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தகவல்!

 துனிசியாவில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் கடும் வெப்ப அலை...

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை!

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் தொடர்பான மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான...

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள்!

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...