சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் பலப்படுத்தும் வகையில் Swiss House of Religions பிரதி நிதிகள் இலங்கை வருகை:

Date:

புத்தளத்தில் சகல மதத்தவர்களுக்குமான சர்வமத இல்லம் ஒன்றை அமைப்பதற்கான யோசனைகளும் முன்னெடுப்பு

சுவிஸ் நாட்டில் இயங்கி வருகின்ற Swiss House of Religions அமைப்பானது உலகளாவிய மட்டத்தில் சர்வமத பணிகளை முன்னெடுக்கின்ற ஒரு சிறப்பான அமைப்பாகும்.

இந்த அமைப்பு புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினருடன் நெருக்கமான உறவை பேணி வருகின்ற ஒர் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து புத்தளம் மாவட்டத்தில் காணப்படுகின்ற சர்வ மதங்களுக்கிடையிலான பலமான நெருக்கம், உறவு அவர்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்படுகின்ற இன்னோரன்ன பணிகளை அவதானித்ததன் வகையில் புத்தளத்தில் சகல மதங்களுக்குமான ஒரு சர்வமத இல்லத்தை அமைப்பதற்கான ஒரு யோசனையை முன்னெடுக்கும் வகையில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் அவர்களுடன் இது தொடர்பாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததோடு அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் தூதுவர் திருமதி கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) மற்றும் அதிகாரிகளுடன் ஒரு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது மாத்திரமல்லாமல் அரச மட்டத்தில் இவ்வாறானதொரு பணியை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை பெறும் நோக்கில் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி அவர்களையும் சந்தித்து மேலதிக கலந்துரையாடல்களில் இவர்கள் ஈடுபட்டனர்.

இச்சந்திப்புகளின் போது ஒவ்வொரு தரப்பை சார்ந்தவர்களும் இந்த நல்ல முயற்சியை வரவேற்றது மாத்திரமல்லாமல் அவரவர் தரப்பிலும் அரச தரப்பிலும் இவ்வாறான பணியை முன்னெடுப்பதற்கு தங்களால் செய்ய முடியுமான பங்களிப்பு பற்றியும் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித்தமை விசேட அம்சமாகும்.

இச்சந்திப்புக்களின் போது Swiss House of Religions அமைப்பின் சார்பில்  பல்சமய இல்லம் மற்றும் சைவநெறிக் கூட ஒருங்கிணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் சட்டவியலாளர் சுவிஸ் சர்வமத பீட நிர்வாகக் குழு உறுப்பினருமான செல்வி லாவன்யா இலக்சுமணன் ஆகியோரும் சுவிஸ் நாட்டிலிருந்து கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் சார்பில் கௌரவத்துக்குரிய சுதஸ்ஸி தேரர், சுந்தரராம குருக்கள், அருட்தந்தை கெனடி, அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோரும் அமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

2016 முதல் புத்தளத்தில் இயங்கி வருகின்ற புத்தளம் சர்வமத அமைப்பானது பலரும் போற்றும் வகையில் முன்மாதிரியான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...