சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வெளியிடுவதற்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் காலை 8.30 மணியிலிருந்து நண்பகல் 12.30 மணி வரை திறந்திருக்குமென்று பதில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். எஸ்.பீ. சூரியபெரும தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்தியாக இருந்தால், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தை வெளியிடுவதற்காக மாத்திரம் நாளை சனிக்கிழமை ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கோரிக்கை முன்வைக்காத இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கை பத்திரத்தை எடுத்து வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...