துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; இஸ்தான்புல் முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

Date:

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் நகர மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைதுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊழல் வழக்கு தொடர்பில் இமாமோக்லுவின் நெருங்கிய உதவியாளா் உட்பட மேலும் 100 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுக்குச் சொந்தமான ‘அனடோலு’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி எர்துகானை எதிர்த்துவரும் இமாமோக்லு, அடுத்த தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளமையானது எதிர்க்கட்சியினரை அரசு ஒடுக்குகிறது என்ற விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

2014 ஆண்டு முதல் துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் செயல்பட்டு வருகிறார். நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த அர்தூகான்  1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக செயல்பட்டுள்ளார். மேலும், 2003 முதல் 2014 வரை துருக்கி பிரதமராகவும் செயல்பட்டுள்ளார்.

ஊழல் , பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக இமாமோக்லு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் இமாமொக்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...