தேசபந்து தென்னக்கோனுக்கு நாளை வரை விளக்கமறியல்!

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னக்கோனால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேல்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த 17 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவர் நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து தேசபந்து தென்னக்கோனை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...