நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Date:

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...