தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவு..!

Date:

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.

முன்னதாக தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதிவான் உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.

பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல, தென்னகோன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பான ஏதேனும் தகவல்களை வழங்குமாறு பொலிஸ்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...