பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு

Date:

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கசற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பட்லந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த திங்கட்கிழமை (10) அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.

இந்த நிலையில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...