“மக்களை பண்படுத்துவதே ஊடகத்தின் பணியாக இருக்க வேண்டும்”:கொழும்பில் தமீமுன் அன்ஸாரி

Date:

“மக்களை பண்படுத்துவதே ஊடகத்தின் பணியாக இருக்க வேண்டும்”என தமீமுன் அன்ஸாரி தெரிவித்தார்.

நேற்று (11) கொழும்பில் Pahana மீடியாவின் ஏற்பாட்டில், கருத்தரங்குடன் கூடிய இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்ட சபை முன்னாள் MLA,யும் மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவருமான மு. தமிமுன் அன்ஸாரி மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய ஆளுமைகள் மட்டுமே பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊடகத்துறையினர் , கல்வியாளர்கள், ஆர்வலர்கள், வணிகப் பிரமுகர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் ம.ஜ.க.தலைவர் மு.தமிமுன் அன்சாரி உரையாற்றிய முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

“நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை மூன்றும்தான் ஒரு நாட்டை வழி நடத்துகின்றன.

ஊடகம் வரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஊடகத்துறை நினைத்தால், நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும் .
நீதிமன்றத்தை கேள்வி கேட்கவும் முடியும்.

அத்தகைய அசைக்க முடியாத சக்திகளாக காட்சி ஊடகங்களும் ,அச்சு ஊடகங்களும் இன்று மாறியுள்ளன.

தற்போது சமூக வலைத்தளங்களும் வளர்ந்து வருகின்றன. இவைதான் உலகை வழி நடத்திக் கொண்டுமிருக்கின்றன என்றும் கூறலாம்.

தனிநபர்களும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நிலையில் , இத்துறையில் ஈடுபடும் செயலாற்றும் அனைவருக்கும் சமூக கடமைகள் உண்டு .
ஊடகத்தில் செயல்படுபவர்களுக்கு அதிகமான கடமைகளும், பொறுப்புக்களும் இருக்கின்றன .

மக்களை பண்படுத்துவதும், சிறந்த குடிமக்களை உருவாக்குவதும் அவர்களின் முக்கிய கடமைகளாகும்.

சமூகங்களுக்கிடையே உறவுகளை ஏற்படுத்தி, தனிமனித உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அவர்களிடம் இருக்கிறது.

இதை உணர்ந்து ஊடகத்துறையில் பணிபுரிவர்கள் இயங்க வேண்டும் .

அந்த வகையில் இலங்கையில் செயல்படும் NewsNow ஊடகம் முன்மாதிரியாக திகழ்கிறது.

பல்வேறு சமூக அறிஞர்களையும், ஆளுமைகளையும் அழைத்து இது போன்ற கருத்தரங்களை நடத்துவதை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இலங்கை எங்களுக்கு அண்டை நாடு என்ற வகையிலும், நட்பு நாடு என்ற வகையிலும் இலங்கையின் மீது அன்பு உண்டு.

கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் சூழல் மாறி இருக்கிறது, புதிய தலைமுறைகளின் பார்வைகளும் , புரிதல்களும் வேறு மாதிரி இருக்கின்றன.

இதற்கு ஏற்ப எதிர்காலத்தை வழிநடத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது .

இந் நிகழ்ச்சியை ஊடகத்துறையினரும், மற்ற ஆளுமைகளும் பங்கேற்கும் வகையில் வழி நடத்திய அஷ்ஷெய்க். முஜிப் சாலிஹ் அவர்களுக்கும், Pahana மீடியா நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் பேசினார் .

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் (நளீமி), அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி தேரர், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...