மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் அதன் இமாம்களும் ஏனையோரும் நோன்பு துறக்கும் அழகிய காட்சி (வீடியோ)

Date:

புனித ரமழான் மாதத்தின் சவூதி அரேபியா மதீனா நகரில் உள்ள மஸ்ஜிதுன் நபவியில் அதன் இமாம்களும் ஏனையோரும் நோன்பு துறக்கும் அழகிய தருணங்களை பார்க்கக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் புனித ரமழான் மாதத்தில் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில் மதீனா பிராந்தியத்தின் ஆளுநரான இளவரசர் சல்மான் பின் சுல்தான் பாதுகாப்புப் படையினருடன் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மேலும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில், இமாம்கள், முஸ்லிம்கள், அனைவரும் இணைந்து நோன்பு திறந்த அழகிய தருணங்களும் காணப்பட்டன.

மஸ்ஜிதுன் நபவியின் பரவலாக விரிக்கப்பட்ட இரவு உணவு வரிசைகள், பக்தர்கள் அனைவரையும் ஒரே சமூக உறவினராக இணைக்கும் ஒரு புனித நிகழ்வாக அமைந்தது.

இனிமையான தருணங்களை பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வு, ஈகை, சகோதரத்துவம், மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் சின்னமாக மிளிர்ந்தது.

அந்த நெகிழ்ச்சியான காட்சிகளை  கீழேயுள்ள வீடியோவில் பாருங்கள்!

Popular

More like this
Related

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...