மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

Date:

மியான்மர் நாட்டில் சற்று நேரத்திற்கு முன்பு இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவானது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டது.இதற்கிடையே அங்குப் பூகம்பத்தால் ஒரு மாபெரும் கட்டிடம் நொடிகளில் இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில்  வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...