முடிவுக்கு வரும் உக்ரைன்- ரஷ்யா போர்? :சவூதியில் இன்று பேச்சுவார்த்தை!

Date:

ரஷ்யா- உக்ரைன்  போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த மாதம் 28ம்  வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டினார்.

உதவியை நிறுத்தியதால் உக்ரைன் பணிந்தது. இதையடுத்து இன்று 2வது கட்டமாக இன்று சவூதி அரேபியாவில் உக்ரைன் ஜனாதிபதி  மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு  முதல் போர் நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதோடு உக்ரைனுக்கு உதவிகளை வழங்கின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து வந்தது உக்ரைன்.

இதற்கிடையே  அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றுள்ளார்.

அதன்பிறகு நிலைமை மாற தொடங்கியது. போரை நிறுத்துவதில் ட்ரம்ப் ஆர்வமாக உள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

அதேபோல் அமெரிக்கா – ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சவூதி அரேபியாவில் பேசினர். இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதன்பிறகு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் கடந்த பிப்ரவரி 28 ம் திகதி வெள்ளை மாளிகையில் வைத்து பேசினர். அதன்பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கடும் மோதல் ஏற்பட்டது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோரின் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். ரஷ்யாவை குற்றம்சாட்டும் நோக்கத்தில் ஜெலன்ஸ்கி இருந்தார்.

மேலும் இந்த போரில் அமெரிக்கா, உக்ரைனுக்கு உதவவில்லை. உக்ரைன் தனியாக போரை சமாளித்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர்  கொலைகாரர் என்று கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேரலையில் இருநாட்டு தலைவர்களும் மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று சவூதி  அரேபியாவில் அமெரிக்கா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை  நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது சவூதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் வைத்து நடைபெற உள்ளது.

கடந்த பிப்ரவரி 18ம் திகதி நடந்த போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா – ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி   அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இந்த முறை அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தை ஜெட்டா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா மற்றும் உக்ரைன் சார்பில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு சவூதி அரேபியா மத்தியஸ்தம் செய்கிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைனுக்கு வழங்கிய உதவிக்கு கைமாறாக அந்த நாட்டின் கனிமவளத்தை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

அதேபோல் ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அமெரிக்கா உறுதியளிக்கும் வகையில் ஒப்பந்தம் என்பது கையெழுத்தாக உள்ளது.

முன்னதாக இந்த பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்றைய தினமே சவூதி  அரேபியா சென்றார். அங்கு அவர் சவூதி  அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு நல்லபடியாக முடிந்தது என்று ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் டிமைட்ரோ லைட்வின் தெரிவித்தார்.

அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், சவூதி  அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் 2 மணிநேரம் சந்தித்து பேசினர். இந்த மீட்டிங்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் பங்கேற்றார்.

 

 

 

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...