முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை!

Date:

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டிருந்தார்

இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததார்

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...