முஸ்லிம் ஊடகவியலாளர்களை அழைத்து, அரசாங்க தகவல் திணைக்களம் நடத்திய இப்தார் நிகழ்வு!

Date:

இஸ்லாமியர்களின் புனித நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும், விசேட அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் அவர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டில் முன்னணியில் திகழும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாடு எனும் ரீதியில் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் மத பேதங்களை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் கலாச்சார நிகழ்வுகள் இனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வழிவகுப்பதாகவும் ஊடக அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களையே சாரும்,  முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் எய்ட் நிறுவனமும் கிண்ணியாவில் இயங்கும் குளோபல் எஹ்ஸான் ரிலீப் நிறுவனமும் இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...