ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையிலிருந்து விலகிய நீதிபதி!

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெற்றிடங்கள் இருக்கும் போது நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உறுப்பினரான நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தர இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதால், அவர் இல்லாத நீதிபதிகள் குழு முன் இந்த மனுவை மே 9 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க இதன்போது உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியின் சட்டத்தரணி சேனக வல்கம்பயவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றில் 05 வெற்றிடங்கள் காணப்படுவதாக மனுதாரர் ஜனாதிபதி சட்டத்தரணி மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நீதித்துறை வெற்றிடங்களை அப்போதைய ஜனாதிபதி நிரப்பத் தவறியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...