“ராபீதா நளீமிய்யீன்” சமூக வகிபாகம் குறித்த கலந்துரையாடலும் இப்தாரும்!

Date:

ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர் அமைப்பான ராபீதா அன் நளீமிய்யீன் புத்தளம் மாவட்ட கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த 16 ஆம் திகதி புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வமைப்பின் புத்தளம் பிரதேச தலைவர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர், இஸட் ஏ.எம். சன்ஹீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர்கள் உட்பட பிரதேசத்தின் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உலமாக்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதான உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிட்டெட்டின் பணிப்பாளரும் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க், எம்.எஸ்.அப்துல் முஜீப் (கபூரி )”‘ராபிதா நளீமிய்யீனிடம் சமூகம் எதிர்பார்ப்பது என்ன?”‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இன்றைய சமூகச் சூழலில் ராபிதா நளீமிய்யீன் என்ற அமைப்பு இஸ்லாமிய பின்புலம் கொண்ட ஒரு புத்திஜிவிகளின் அமைப்பு என்ற வகையில் அதனிடம் சமூகம் எதிர்பார்க்கின்ற விடயங்கள் என்ன? என்பது பற்றிய குறிப்புக்களை அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர், இஸட்.ஏ.எம் சன்ஹீர், சட்டத்தரணி எம்.எச்.பஸ்லுல் ரஹ்மான் நளீமி,மேர்சி கல்வி வளாகத்தின் பணிப்பாளர், அஷ்ஷெய்க். எம். முனாஸ் (நளீமி)ஆகியோரும் கருத்துரைகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...

தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை வாரம் ஆரம்பம்!

ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு...

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்

உள்ளூர்  பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள்...

மஹர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இஸ்லாத்தின் அடிப்படை கருத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துகளின் நெறிமுறை, தத்துவார்த்த மற்றும் நடைமுறை சாராம்சம் குறித்த...