ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மாநாடு ஞாயிற்றுக்கிழமை..!

Date:

ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் திகதி (ரமழான் பிறை 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் அஷ்ஷெய்க் எம். பி.எம்.ஹிஷாம் (அல் பத்தாஹி ) தலைமையில் இடம்பெறும் இம்மாநாட்டில்,  கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் சிரேஷ்ட அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பிறை சம்பந்தமாக மேல திக தகவல்களுக்கு 0112432110, 0112451245, 0777316415, தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...