அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் புதிய சுற்றறிக்கை..!

Date:

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை நேற்று (25) பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், புதிய சம்பள அளவுத்திட்டத்திற்குள் கீழே குறிப்பிடப்படும் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

01.2019.04.22 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 09/2019 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 2,500/- மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவு.

02. 2022.01.13 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2022 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 5,000/- மாதாந்தக் கொடுப்பனவு.

மேலும், சம்பளத்தின் நிகர அதிகரிப்பின் மாதாந்தம் உரித்தாகும் தொகை மற்றும் மாதாந்தம் செலுத்தப்படாத தொகை கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிரலில் காட்டப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சுற்றறிக்கை

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...