காசாவில், இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடங்கியுள்ள இனப்படுகொலைகளை கண்டித்து நாளை (21) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்துக்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதோடு பதாகைகள், பெனர்களுடன் வருமாறும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக விடுத்திருக்கும் அழைப்பில் ஏற்பாட்டுக் குழு தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை.