மெல்போர்னிலிருந்து கத்தார் விமான சேவையினூடாக தோஹா நோக்கி கணவன் மனைவி இருவர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் சக பெண் பயணி ஒருவர் திடீரென இறந்துவிட்டார்.
இந்த பெண்ணின் உடலை வணிக வகுப்பு (Business Class) பகுதிக்கு மாற்ற விமான பணியாளர்கள் முயற்சித்தனர்.
எனினும் இறந்த பெண்ணின் உடல் பருமனாக இருந்ததனால் அது சாத்தியப்படவில்லை. இதன் காரணமாக அவ்வுடலை இக்கணவன் மனைவி பக்கத்திலேயே வைத்துவிட்டனர்.
விமானம் தரையிறங்கியதன் பின்னரும் கூட அம்பியூலன்ஸ் பணியாளர்கள் வரும் வரையில் இவ்விருவரும் இந்த உடலக்கு அருகில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இச்சம்பவமானது தமக்கு மிகுந்த வேதனைகளையும் மன உளைச்சலையும் தந்ததாக இவ்விருவரும் தெரிவித்தனர்.
அதேவேளை இந்த சம்பவத்தில் ஏற்பட்ட அனைத்து தவறுகளுக்கும் வருந்துவதாக காத்தார் விமான சேவை அறிவித்துள்ளது.
அல்ஹுர்ரா செய்திச் சேவை கத்தார்.