காசா மீது இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதலால் குறைந்தது 404 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
562 பேர் காயமடைந்துள்ளனர், இது ஹமாஸுடனான இரண்டு மாத கால பலவீனமான போர் நிறுத்தத்தை முறியடித்தது.
தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் குழந்தைகள், என்றும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 2023 முதலே மோதல் போர் நிலவி வந்தது. பெரும் முயற்சிக்கு பிறகே கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், அது பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தம் என்றும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடங்கும் என்றுமே பலரும் எச்சரித்து வந்தனர்.
இந்தச் சூழலில் தான் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 404 பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சமீப காலங்களிலே நடந்ததிலேயே மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.
அதாவது தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே காசா மீது முழு வீச்சில் இந்தத் தாக்குதல் இஸ்ரேல் நடத்தியுள்ளது.